வீட்டை காலி செய்து வெளியே போங்க.. தளபதி விஜய் போலீசில் புகார்..

 


தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் விஜய் தீடீரென காவல் நிலையில் புகார் ஒன்றை அளித்துள்ளது விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆம் நடிகர் விஜய்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் 2 நபர்களை வீட்டை காலி செய்யும்படி, நடிகர் விஜய் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தில், அகில இந்திய செயலாளராக இருந்து வந்த ரவிராஜா மாற்றம் துணை செயலாளராக பதவி இருந்த ஏ.சி.குமார் ஆகியோர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக, அதன் இயக்க பொறுப்பாளர் ஆனந்த் அறிவித்தார்.


பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட இருவரும் சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.


இந்நிலையில் அவர்களிடம், நடிகர் விஜய் வீட்டை விட்டு காலிசெய்யுமாறு கூறியுள்ளார். ஆனால், அவர்கள் அறையை காலிசெய்யாமல் இருந்து வந்ததாகத் தெரிகிறது.


இந்நிலையில் நடிகர் விஜய் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், அவர்களை காலிசெய்து தரும்படி, விஜய் தரப்பில் வழக்கறிஞர்கள் புகார் மனுவை அளித்துள்ளனர்.

Post a Comment

0 Comments