வாகன விபத்துக்களில் மூவர் பலி!

வாகன விபத்துக்களில் மூவர் பலி!

நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


குருணாகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருணாகலை வீதியின் படகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்று (05) இரவு குருணாகலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லொறியொன்றில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் பின்னால் பயணித்த நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் குருணாகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேக்கவத்த குட்டிவில வீதியின் கல்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். 

கல்கடுவ பிரதேசத்தில் குட்டிவில நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியில் நடந்து சென்ற பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

குறித்த விபத்தில் 44 வயதுடைய வேகொவ்வ, மினுவங்கொட பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இதேவேளை, சிலாவதுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரிப்பு நானட்டான் வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். 

நானட்டான் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழுந்து வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments