தேர்தல் முடிவுகள் - அனுமதி பெற்ற ஊடகங்களுக்கு மாத்திரமே!


 தேர்தல் முடிவுகள் -  அனுமதி பெற்ற ஊடகங்களுக்கு மாத்திரமே!

2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி 6 ஆம் திகதி காலை 7 மணிக்கு அல்லது 8 மணிக்கு ஆரம்பமாவுள்ளது. 


அரசியல் கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் சார்பில் முகவர்களை நியமிப்பது குறித்தும் வர்த்தமானி அறிவிப்பு தேர்தல் ஆணைக்குவினால் வெளியிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, கொடுப்பனவை செலுத்தி, பதிவு செய்து கொண்டுள்ள இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரமே 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகளை அறிவிப்பதற்கான அனுமதியை தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது. 

இந்த நிலையில், தற்சமயம் பிரதான ஊடக நிறுவனங்கள் சில இதற்கான பதிவை மேற்கொண்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக தேர்தல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே பின்வரும் விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

Post a Comment

0 Comments