நேற்றைய தினத்தில் மாத்திரம் 1053 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

நேற்றைய தினத்தில் மாத்திரம் 1053 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

நேற்றைய தினத்தில் மாத்திரம் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 


அதன்படி, 1053 தேர்தல் முறைப்பாடுகள் நேற்றைய தினம் (05) கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் இதுவரையில் மொத்தமாக 8657 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எவ்வாறாயினும் ஒரு வன்முறை செயல் கூட இதுவரை பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவற்றுள் சமூக ஊடகங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் 5236 இல் வர்த்தக விளம்பரங்கள் 100 சதவீதமும், ஏனைய முறைப்பாடுகளில் 78 சதவீதமும் அகற்றுவதற்கு சமூகவலைத்தள நிறுவனங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments